இலங்கை ஏப்ரல், 30
இலங்கையில் அரிய வகை ‘டோக் மக்காக்’ குரங்குகளை சீனாவுக்கு அந்நாடு ஏற்றுமதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன உயிரியல் பூங்காக்களில் காட்சிப்படுத்துவதற்காக 1,500 குரங்குகளை சீன காட்டுயிர் காப்பு அமைச்சகம் கேட்டுள்ளது. உயிருள்ள விலங்குகளை ஏற்றுமதி செய்ய இலங்கையில் தடை இருந்தாலும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கி உள்ளதால் இக்கோரிக்கையை பரிசீலிக்கலாம் என அறிய முடிகிறது.