ஆந்திரா ஏப்ரல், 29
பிரபல மறைந்த நடிகர் என்டிஆர் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். என் டி ஆர் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று ஆந்திரா சென்ற நடிகர் ரஜினி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது என்டிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர் என்டிஆர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் கொடுத்து தொடங்கி வைத்தார். உடன் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலையா உள்ளிட்டோர் இருந்தனர்.