மதுரை ஏப்ரல், 29
தமிழக அரசால் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயரிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு வரும் ஜூன் மாதம் முதல் மக்களின் பயன்பாட்டுக்கு இந் நூலகம் வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகம் ஆகும். தற்போது அதைவிட பிரம்மாண்டமாக ₹114 கோடியில் மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது.