சென்னை ஏப்ரல், 29
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அளித்த டிவிடெண்ட் ஜாக்பாட் வங்கி கணக்கில் ஜூலை 28ம் தேதி வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2023 ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி உடன் முடிவடைந்த தனது நான்காவது காலாண்டில் ரூபாய் 1,432.88 கோடி நிகர லாபத்தை பதிவு செய்த அந்நிறுவனம் ரூபாய் பத்து மதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு 140 ரூபாயை ஈவு தொகையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது