புதுடெல்லி மே, 2
FastTag முறையில் கீழ் ஒரே நாளில் 193.15 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் 2023 ஏப்ரல் 29 அன்று ஒரே நாளில் 6.9 கோடிக்கு அதிகமானோர் 1.16 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர். நெடுஞ்சாலையை பயன்படுத்தும் 97 சதவீதம் பேருக்கு FAST TAG வழங்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.