சென்னை ஏப்ரல், 27
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, கலைஞர் பற்றிய பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது சங்க இலக்கியங்களுக்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் குறித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.