புதுடெல்லி ஏப்ரல், 27
மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதில் குரல் என்ற பெயரில் அகில இந்திய வானொலி வாயிலாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன் நூறாவது நிகழ்ச்சி ஏப்ரல் 30ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இதையொட்டி, மத்திய அமைச்சர் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மனதின் குரல் சிறப்பு தபால் தலையை வெளியிட்டார்.