ராமநாதபுரம் ஏப்ரல், 27
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் முக்கிய கோரிக்கையான வீட்டுமனை கோரிக்கை மீது வட்டாட்சியர்கள் சிறப்பு கவனம் எடுத்து தகுதியுடைய நபர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டார்.