சென்னை ஏப்ரல், 27
ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் காமராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து காமராஜ் என்ற படம் கடந்த 2004 இல் வெளியானது. 9 ஆண்டுகளாக முதல்வராக இருந்த காமராஜரின் வாழ்க்கை படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காமராஜரின் வாழ்க்கையை இந்தியர்கள் அனைவரும் அறியும் வகையில் ‘தி கிங் மேக்கர்’ என்ற பெயரில் ஜூலை 15ம் தேதி படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிடுவதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.