சென்னை ஏப்ரல், 27
ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடக்கிறது. அமலுக்கு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து 69 சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் இன்று விசாரிக்கின்றனர்.