சென்னை ஏப்ரல், 27
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளையோடு மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 12 ம்ம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதியும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 20-ம் தேதியும் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களின் இறுதி தேர்வுகளையும் 28 ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே நாளையோடு அனைவருக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.