சென்னை ஏப்ரல், 25
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நேற்று ஒரே நாளில் இரண்டு முக்கிய அரசாணைகளை திரும்ப பெற்றிருக்கிறது. காலையில் அறிவித்ததை மாலையை திரும்ப பெற்றதால் யூ டர்ன் அடித்த அரசு என எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்ற மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதி என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.