ராமநாதபுரம் ஏப்ரல், 24
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுரை தேவதாஸ் மருத்துவமனை முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் 29. 4. 2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகில் அமைந்துள்ள சதகுத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற வலியுறுத்தப்படுகிறது.