சென்னை ஏப்ரல், 23
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி தற்போது நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நீதிபதி சூரியகாந்த் ஒரு வாரத்திற்கு முன் குணமடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து நீதிபதிகளுக்கு தொற்று உருவாகியுள்ளது. இதனால் வழக்கறிஞர் ஆன்லைன் மூலம் ஆஜராகி வழக்கு விசாரணையை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.