சென்னை ஏப்ரல், 19
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான புகார்களை தீர்க்க குறை தீர்க்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, ஊரக வேலைத்திட்டம் குறித்த குறைகளை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1800 425 2152 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். குறைதீர்க்கும் அலுவலகங்கள் குறித்த விபரங்கள் tnrd.tn.gov.in என்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.