தேனி ஏப்ரல், 17
தாய்மை திரைப்படத்தில் ஒரு தாய் எவ்வளவு முக்கியமானவள் என்று சொல்லப் போகிறேன் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். தேனி கருமாத்தூரில் நேற்று படம் பூஜை நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்த படம் என் மண் சம்பந்தப்பட்டது. என் மக்கள் சார்ந்த வாழ்க்கை. இந்த படத்தில் நீங்கள் எதிர்பார்க்கின்ற களம் இருக்காது. என் பூமியில் என் சொந்தங்களோடு என் சொந்தங்களோடு இணைந்து நிற்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.