ராமநாதபுரம் ஏப்ரல், 18
இன்றும் நாளையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் ஆளுநர் ரவி. காலை 11 மணி முதல் 12 30 மணி வரை ராமேஸ்வரம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன், பின்னர் ஒரு மணி நேரம் வரை ஆசிரியர்களுடனும் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை தேவிபட்டினம் நவகிரக கோவிலில் தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் என பயணத்தை தொடர்கிறார் ஆளுநர் ரவி.