தோஹா ஏப்ரல், 16
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர்முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்கலந்து கொண்டார். அவர் தனது உரையில் கத்தார் நாட்டில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. கடல் கடந்து வந்தாலும் தாயகத்தில் இருப்பது போன்ற உணர்வை இது ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார்.
இதயடுத்து அவருக்கு பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌராவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் நூருல் அமீன், மூமின், ஷேக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.