பாகிஸ்தான் ஏப்ரல், 17
கார்கில் அருகே கர்பதங் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த பழைய வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அதில் 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இரண்டு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1999இல் இந்தியா பாகிஸ்தான் இடையே கார்கிலில் நடந்த போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டா என விசாரணை நடைபெற்று வருகிறது.