வேலூர் ஏப்ரல், 15
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த 22 ஆண்டுகளாக திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக தனது கிராமியம் நாடகக்கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சேவையை பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒரு லட்சம் காசோலையும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.