கோவை ஏப்ரல், 15
சுலபத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிடவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் தம்பி ராமையா. கோவையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை பார்வையிட்ட அவர், ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல ஸ்டாலின். ஞான நிலை எட்டிய வயதில் முதல்வராக இருக்கிறார். அந்த ஞானத்தின் விளைவாக தமிழ்நாடு நிறைய நல்ல விஷயங்களை பார்க்கும். கண்காட்சியின் நிறைவு பகுதி வரும்போது எனக்கே நெகிழ்வு ஏற்படுகிறது என்று கூறினார்.