பிரிட்டன் ஏப்ரல், 14
பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார். அப்போது இருதரப்பு பரஸ்பர நட்புறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் இந்தியாவிற்கு எதிரான பயங்கர வாத சக்திகள் மீது நடவடிக்கை எடுத்த ரிஷி சுனக்கிற்கு மோடி பாராட்டு தெரிவித்தார். தவிர பிரிட்டனில் உள்ள இந்திய பொருளாதார குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்தும் கேட்டுள்ளார்.