துபாய் ஏப், 14
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சாரம் மையம் 1976 துபாயில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் வருடம் தோறும் ரமலான் மாதம் முழுவதும் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு, அத்துடன் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருளுடன் இப்தார் வழங்கப்பட்டு வருகிறது. துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லூத்தா பள்ளிவாசல் சுற்றியுள்ள உள்ள பல்வேறு இடங்களில் விரிப்புகள் விரித்து 80 தன்னார்வலர்களுடன் இப்தார் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இப்பகுதியில் அதிகளவில் தமிழ்நாடு சேர்ந்தவரும் மற்ற பல நாடுகளை சேர்ந்தவரும் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அமீரகத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் இந்நிகழ்வில் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதரக அதிகாரி காளிமுத்து பங்கேற்றார். அவர் பேசும்போது,
இப்தார் நிகழ்ச்சி மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு அனைவருக்கும் ஈமான் அமைப்பு செய்து வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத், அபுதாபியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஷிரிதேவி, கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், அமீரக தமிழ் சங்கத் தலைவி ஷீலா தொழிலதிபர் அபுதாஹீர் மனிதநேய மக்கள் கட்சி அமீரக நிர்வாகி இப்ராஹிம், தோப்புத்துறை அவுலியா, கவிஞர் சசிகுமார் , அமீரக விசிக நிர்வாகி முத்தமிழ் வளவன், உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி ஈமான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்நஜீம் மரிக்கா நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஈமான் தலைவர் பி.எ.ஸ்.எம் ஹபிபுல்லாகான், பொருளாளர் பிலாக் துளிப் யஹியா, துணைத் தலைவர் கமால் ,ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
M. நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.