மும்பை ஏப்ரல், 12
துல்கர் சல்மான் மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சீதாராமம். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை மிருனாள் விளக்கம் அளித்துள்ளார். இரண்டாம் பாகம் வருமா என தெரியாது. ஆனால் வந்தால் அதில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.