திருப்பதி ஏப்ரல், 9
நேற்று ஒரே நாளில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உண்டியலில் ₹4.21 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று காலை 3 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 43,862 பக்தர்கள் நேற்று மொட்டை அடித்து முடி காணிக்கை கொடுத்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் கடந்த இரண்டு தினங்களாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது