சென்னை ஏப்ரல், 8
அமேசான் நிறுவனத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லக்கி ட்ரா பரிசுப் போட்டி நடத்துவதாக மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது இதை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். நீங்கள் தான் வெற்றியாளர் என்று கூறுவர் பரிசு அல்லது ரொக்கத்தை பெறுவதற்கு ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி போன்ற வரிகளை கட்ட வேண்டும் என்று கேட்டு பணம் பறிப்பர் எச்சரிக்கையாக இருங்கள் என்றுள்ளார்.