திருப்பதி ஆகஸ்ட், 14
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் 21ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.