மும்பை ஆகஸ்ட், 14
ஆகாசவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி… இப்படி ஒரு குரலை கேட்காமல் 1980, 90களில் எந்த தமிழர் வீடும் விடிந்து இருக்காது வானொலியை மிகப் பிரதான ஊடகமான அந்த காலகட்டத்தில் காலை 7:15க்கு ஒலிக்கும் ஆகாசவாணி செய்திகளின் வாசிப்பாளர்களில் ஒருவர்தான் சரோஜ் நாராயணசுவாமி டெல்லி அகில இந்திய வானொலியில் தமிழ் செய்தி வாசிப்பாளராய் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய சரோஜ் நாராயணசுவாமி நேற்று மும்பையில் காலமானார்.
இவ்வுலகில் அழகாய் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மத்தியில் குரலால் அறியப்பட்டவர்கள் பலருண்டு அதில் ஒருவர் டெல்லி ஆகாச வானொலி நிலையத்தில் செய்து வாசிப்பாளராக பணியாற்றிய சரோஜ் நாராயணசாமி அவருடைய கம்பீரக் குரலோடு ஒன்றிப்போனவர்கள் பலர் உண்டு. இன்றைக்கு அறிவியல் உலகம் வளர்ந்திருக்கிறது கையிலே உலகம் விரிந்திருக்கிறது.
ஆனாலும் 1980 காலகட்டத்தில் வானொலியை கதி என நம்பி கிடந்தவர்கள் தான் அதிகம். அதிலும் சரோஜ் நாராயணசாமி போன்ற கணீர் குரலை கேட்பதற்காக தவம் கிடந்தவர்கள் ஏராளம். அவர் செய்தி வாசிக்க ஆரம்பித்து விட்டால் அனைவரும் கேட்பதற்காகவே ரேடியோவில் சத்தம் கூட அதிகமாக வைக்கப்படும் ரேடியோ இல்லாதவர்கள் கூட அவருடைய குரலை கேட்பதற்கு அக்கம் பக்கத்து வீட்டுக்கு படையெடுப்பார்கள் அல்லது வீதியில் இருக்கும் டீ கடைக்கு செல்வார்கள் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்று அவர் சொல்லும் அழகே தனி அழகு தான்.
இப்பேற்பட்ட தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற சரோஜ் நாராயண சுவாமி நேற்று காலமானார். அறிவியல் மாற்றத்தால் ஆயிரம் பொருட்கள் விற்பனைக்கு வந்து பழமையை அளித்தாலும் சரோஜின் குரல் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.