மும்பை ஆகஸ்ட், 13
பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் சீசன் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரலில் முடிவடையும். ஆனால் இந்த முறை ஒரு மாதத்திற்கு முன்பாக அதாவது அக்டோபரில் பெண்களுக்கான 20 ஓவர் போட்டிகள் தொடங்கி பிப்ரவரியில் மண்டலங்களுக்கான ஒரு நாள் போட்டியுடன் நிறைவடையும் வகையில் போட்டி அட்டவணையை கிரிக்கெட் வாரியம் மாற்றம் செய்துள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.