புதுடெல்லி ஏப்ரல், 7
நாட்டிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 34 தனியார் கல்லூரிகளும் உள்ளன. அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 30 அரசு, 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. குறைந்த அளவாக பஞ்சாபில் 5 அரசு, 7 தனியார் மருத்துவ கல்லூரிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.