சென்னை ஏப்ரல், 7
புதிய குடும்ப அட்டைகளை தபால் மூலமாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப அட்டை தொலைந்து போனாலும் அல்லது திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலோ இணையத்தில் விண்ணப்பித்து அட்டையை பெற வட்ட வழங்கல் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இதனை எளிமைப்படுத்தும் வகையில் இணைய மூலம் விண்ணப்பிக்கும் புதிய அட்டைகளை வீட்டிற்கு தபால் மூலமாக பெரும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.