சென்னை ஏப்ரல், 7
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை விசித்திரமான ஒன்று என்று பா. சிதம்பரம் கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் 163 ஆண்டுகளில் அவதூறு வழக்கில் ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. ராகுல் பேசினால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என பயந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த தகுதி நீக்கம் மக்களை யோசிக்க வைத்துள்ளது என்றார்.