கன்னியாகுமரி ஏப்ரல், 7
கேரளாவில் ஓடும் ரயிலில் தீ வைத்ததாக ஷாருக் சைபி என்பவர் நேற்று முன் தினம் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை தாக்க திட்டமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட டைரியில் கன்னியாகுமரி, குளச்சல், திருவனந்தபுரம், களக்கூட்டம் ஆகிய இடங்களில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.