சென்னை ஏப்ரல், 6
ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜகன்னாத் மகதேவ் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும், அவரது உடல்நிலைக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.