அமெரிக்கா ஏப்ரல், 5
ஆபாச நட்சத்திர நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு சட்ட விரோதமாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். சற்றுமுன் நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் கிரிமினல் குற்றத்திற்கு கைதாவது இதுவே முதல் முறையாகும்.