ஆப்ரிக்கா ஏப்ரல், 5
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மற்றும் ஷபெல்லே மற்றும் ஜூபா பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.