சென்னை ஏப்ரல், 4
வரும் பத்தாம் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் நேற்றோடு முடிந்தது. இதில் 8 லட்ச மாணவர்கள் தேர்வு எழுதினார். தொடர்ந்து வரும் பத்தாம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்த பணிகள் 21ம் தேதி முடிவடைகிறது. அதனை தொடர்ந்து மே ஐந்தாம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.