சென்னை ஏப்ரல், 3
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் 30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.