அமெரிக்கா ஏப்ரல், 3
அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களில் 60க்கும் மேற்பட்ட புயல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை சென்ற வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கின. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இது போன்ற பயங்கரமான புயல்கள் வரும் பத்தாம் தேதி வரை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.