துபாய் ஏப்ரல், 3
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் உள்ள உல்லாச படகில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் அவைத்தலைவர் காமராஜ், பொருளாளர் சனா சாதிக், மகளிர் அணி செயலாளர் வகிதா பானு உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக பிஎம் குரூப் தலைவர் டாக்டர் கனகராஜா, அன்வர் குரூப் நிறுவனர் அன்வர், டாக்டர் பஜிலா ஆசாத், கிரீன் குளோப் நிறுவனர் டாக்டர் ஜாஸ்மீன், அமீரக தமிழ் சங்க தலைவி ஷீலா, கல்ப் கட்ஸ் நிறுவனர் பிரவீன், தேசிய நாளிதழ் தினகுரல் அமீரக தலைமை நஜீம் மரிக்கா, தொழிலதிபர் ஷார்ஜா ராஜா, விசிக செயலாளர் முத்தமிழ் வளவன், மதுரை பிரியாணி நிறுவனர் பாலா, சட்டஆலோசகர் அர்சத்மாலி, முத்தமிழ் சங்கம் பாலு, துபாய் டிக்டாக் புகழ் சரவணன் தம்பதியினர், மீடியா தாஹிர், மதிமுக துபாய் நிர்வாகி துரை, அமமுக அமீரக நிர்வாகி சாதிக், டேஸ்டி பிரியாணி நிர்வாகிகள் அனீபா, ரஸ்மீன் மேலாளர் மஹ்ரூப், உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அமீரக அரசு சார்பாக இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற மனநல ஆலோசகர் டாக்டர் பஜிலா ஆசாத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.