புதுடெல்லி ஏப்ரல், 2
2023 மார்ச் மாதத்தில் ரூ.1,60,122 கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் இதுவே இரண்டாவது அதிகபட்ச வசூலாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. 2022-2023 நிதி ஆண்டில் மொத்தம் 18 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம்.