சீனா ஏப்ரல், 8
2023ல் உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் இதில் 50 சதவீத பங்களிப்பை இந்தியாவும், சீனாவும் அளிக்கும் என சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு, உக்கரின் போர் காரணமாக கடந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறைந்திருந்தது. இது இந்த ஆண்டு தொடரும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலக பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதத்திற்கும் குறைவாக தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.