புதுடெல்லி ஏப்ரல், 2
மத்திய அரசு நேற்று முதல் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு பான் மற்றும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளது. PPF, SSY, SCSS தபால் அலுவலக சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் தேவை. இந்த கணக்குகள் ஆதார் இல்லாமல் தொடங்கப்பட்டால், கார்டை செப்டம்பர் 30, 2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கணக்கு இருப்பு ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும்.