லண்டன் மார்ச், 27
கச்சேரிக்காக லண்டன் சென்ற பிரபல கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு அங்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய அரசாங்கமும், இங்கிலாந்து மருத்துவர்களும் சிறப்பாக கவனித்துக் கொள்வதாக ஜெயஸ்ரீ கூறி இருக்கிறார். சரியான முறையில் சுகம் பெற்று வருவதாக அறிக்கையின் வாயிலாக அவர் தெரிவித்திருக்கிறார்.