Spread the love

சென்னை ஆகஸ்ட், 13

தாய்லாந்து நாட்டிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகன் 21 வயதான முகமது ஷகீல் என்பவர் மீது சந்தேகம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரை சோதனை செய்ததில் தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவர்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் விசாரிக்கும் பொழுது அவர் முறையான தகவல் எதுவும் தரவில்லை. அந்த உயிரணுக்கள் கொண்டு வந்ததற்கான ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த கடத்தல் நபரிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அங்கிருந்து வாங்கி வந்துள்ளார் என்று தெரியவந்தது.

இவரிடம் முறையாக சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் சான்றுகள் இல்லை. எனவே இவைகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு அந்த திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் அந்த நபரிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை இவர் எதற்காக கொண்டு வந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *