சென்னை ஆகஸ்ட், 13
சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு மெகா குடை மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடைபாதை வியாபாரிகளுக்கு ஆயிரத்து முந்நூறு ரூபாய் மதிப்புள்ள மெகா குடை மற்றும் தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
இதில், நடிகர் யோகிபாபு, மண்டல குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், அவைத் தலைவர் குணசேகரன், வழக்கறிஞர் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.