விருதுநகர் மார்ச், 25
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி விற்பனையை தொடங்கி வைத்தார். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.
இதன் மூலம் வருகின்ற நிதி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.