தேனி மார்ச், 25
தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா, லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (52), இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேகமலை பகுதியில் மருந்து ஆளுநராக பணியாற்றி வந்துள்ளார்
இவர் கடந்த 20.2.2016 தேதி மேகமலையில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் தனது மனைவி ஜெயந்தி மகன் ஜான் உள்பட மூன்று பேரும் பழனி செட்டிப் பட்டி அருகே வரும் போது இரண்டு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது கணவர் மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.
ஆறுமுகம் முழு ஊனம் அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர்கள் இழப்பீடு கேட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆறுமுகத்திற்கு இழப்பீடாக ரூ35 லட்சம், ஜெயந்திக்கு ரூ4.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி சுந்தரம் 30-11-2021 அன்று உத்தரவிட்டார்.
மேலும் இழப்பீடு தொகை வழங்காத காரணத்தால் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர். அப்போது குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி கோபி நாத், 4 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் ஒரு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர். வழக்கறிஞர் சரவணன், அமீனா ஹரிஹர பாண்டி உள்ளிட்டவர் இந்த பணியில் ஈடுப்பட்டனர். இதேபோல் இன்று ஆறுமுகத்தின் மணைவி ஜெயந்திக்கு இழப்பீடு தொகையாக வழங்க வேண்டிய ரூ 4.50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால் நேற்று தேனி புதிய பேருந்து நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
விபத்து ஏற்பட்டு நஸ்டஈடு தராதததால் கோர்ட் உத்தரவுபடி அரசு பேருந்து தேனியில் ஜப்தி செய்யப்பட்டது.