புது டெல்லி மார்ச், 22
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது. டெல்லி என்சிஆர், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.