சென்னை மார்ச், 21
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கபூர்வமான எந்த ஒரு திட்டத்தையும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பற்றிய அறிவிப்புகள் எதுவும் இடப்படவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் யானை பசிக்கு சோளப் பொறி வழங்குவதாகவே உள்ளது என கூறியுள்ளார்.